தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் எனப் பாராட்டிய அண்ணாமலை, அவர் அனுபவம் வாய்ந்த தலைவர் என்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து நிச்சயமாக ஒரு நல்ல முடிவை எடுப்பார் எனத் தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ஸின் ஆதரவு கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்ற ரீதியில் அவரது பேச்சு அமைந்திருந்தது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலையின் இந்த நகர்வுகள் தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
