இனிப்பான செய்தி பெண்களே… மகளிர் உரிமைத்தொகை உயர்வு… தமிழக அரசு அதிரடி..!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ₹1,000 உதவித்தொகையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக இந்தத் தொகையை உயர்த்துவதன் மூலம் பெண் வாக்காளர்களின் ஆதரவைத் தக்கவைக்க திமுக திட்டமிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டு என்பதால், முழுமையான பட்ஜெட்டுக்கு பதிலாக இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்த இடைக்கால பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு மட்டுமின்றி, புதிய நலத்திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலை மையமாக வைத்தே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.