15 தொகுதிகள்… 1 ராஜ்யசபா சீட்..! NDA கூட்டணியில் இணைந்ததும் டிடிவி வைத்த மெகா டிமாண்ட்..!!

By Soundarya on தை 21, 2026

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் ஆகியவற்றை அவர் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாபநாசம், சோளிங்கர், சைதாப்பேட்டை, திருவாடானை, சாத்தூர், முதுகுளத்தூர், திருப்பூர், முசிறி, நாங்குநேரி, ஆண்டிபட்டி, மேலூர், காரைக்குடி, ஒட்டப்பிடாரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய தொகுதிகளை அவர் தரப்பில் விருப்பப் பட்டியலாக அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கோரிக்கைகளில், அதிமுக மற்றும் பாஜக தலைமை சுமார் 9 தொகுதிகள் வரை அமமுக-வுக்கு ஒதுக்க முன்வரலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது தொடர்பாக இன்று (ஜனவரி 21, 2026) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், தொகுதிப் பங்கீடு அனைத்தும் சுமூகமான முறையில் முடிக்கப்படும் என்றும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதே இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.