திமுகவில் இணையும் அடுத்த விக்கெட் ஓபிஎஸ்..? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்… குஷியில் ஸ்டாலின்…!!

By Soundarya on தை 21, 2026

Spread the love

ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூண்களாக விளங்கிய வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் மருது அழகுராஜ் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ள கருத்து, ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள அரசியல் சூழலில், ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது. தனது ஆதரவாளர்கள் பலரும் திமுக பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.