சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும் போது அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைக்கும் நோக்கத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்ற பெயரில் நடைபெற்று வரும் திராவக மாடல் கஞ்சா மாடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். இந்த கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள் ஓயாமல் உழைப்போம். 2021 தவறவிட்ட அம்மாவின் ஆட்சியை 2026-ல் உறுதியாக உருவாக்கி காட்டுவோம் என கூறியுள்ளார்.
