விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், “எதற்கும் வாய் திறக்க மாட்டேன், டப்பிங்கிற்கு மட்டும்தான் வாய் திறப்பேன் என்று சொன்னால் எப்படி?” என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விஜய் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதாக மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும் பாஜகவை கடுமையாகத் தாக்கிப் பேசிய கருணாஸ், தமிழகத்தில் பலமாக உள்ள கட்சிகளை சூழ்ச்சி மற்றும் ஆசை வார்த்தைகள் மூலம் உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மாநிலக் கட்சிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட அந்த கட்சி முயல்வதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
