2026-ல் தனித்து ஆட்சி.. மீண்டும் ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கும் அதிமுக?…. செம ஷாக்கில் பாஜக…!

By Nanthini on தை 20, 2026

Spread the love

ஓசூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே தவிர, ஆட்சியில் பங்கு பெறுவதற்காக அல்ல என்று விளக்கமளித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் இந்த கூட்டணி குறித்து அவரே இறுதி முடிவெடுப்பார் என்றும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் பேசினார்.

மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் 1924-ம் ஆண்டு நீதிக்கட்சி காலம் முதற்கொண்டு இன்று வரை கூட்டணி ஆட்சி என்ற நடைமுறையே இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டிய தம்பிதுரை, தமிழக மக்கள் என்றும் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார். 2026 தேர்தலில் அதிமுக 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சிக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.