தவெக-வில் அதிகாரப் போர்..? அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன்.. கசிந்த ரகசியத் தகவல்..!

By Soundarya on தை 20, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகக் கருதி கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அளிக்கப்படும் அதீத அதிகாரமும், தவெக பிரசாரக் குழுவில் தனக்கு மூன்றாவது இடமே வழங்கப்பட்டிருப்பதும் மூத்த தலைவரான அவரை அதிருப்தியடையச் செய்துள்ளது.

குறிப்பாக, தனது சொந்த மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாடக்கூட புஸ்ஸி ஆனந்தின் அனுமதி தேவைப்படும் சூழல் நிலவுவது செங்கோட்டையனுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிபிஐ விவகாரம் உள்ளிட்ட முக்கிய அரசியல் முடிவுகளில் தனது ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், தான் பரிந்துரைத்தவர்களுக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன