தமிழகமே ஷாக்..! இனி காதலர்களுக்கும் இலவச பேருந்து… அதிமுக மாஜி அமைச்சர் அதிரடி…!!

By Soundarya on தை 20, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இனி ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலியுடன் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதியான ஆண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து விளக்கிய அவர், திமுக அரசு பெண்களுக்கு மட்டும் இலவச பயணத் திட்டத்தை வழங்கியதன் மூலம் குடும்பங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

அந்தப் பிரிவினையைச் சரிசெய்து, கணவன் மற்றும் மனைவியை மீண்டும் இணைக்கும் நோக்கத்திலேயே அதிமுக சார்பில் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜியின் இந்த கலகலப்பான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.