சிந்துதுர்க் மாவட்டத்தின் பிங்குலி கிராமத்தைச் சேர்ந்த கௌரவ் சாவந்த், சிஆர்பிஎஃப் (CRPF) வீரராகத் தேர்வாகி, தனது வறுமையான சூழலை முறியடித்து சாதனை படைத்துள்ளார். சாலையோரம் காய்கறி விற்றுத் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வரும் தாயிடம், தான் சீருடை அணியும் கனவு நனவான செய்தியை கௌரவ் பகிரும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தன் மகன் தேசப்பணியில் இணைந்ததை அறிந்த அந்தத் தாய், மகிழ்ச்சியில் அவரைக் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க ஆசீர்வதிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்கின்றன.
View this post on Instagram
இந்த நெகிழ்ச்சியான வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “ஒரு தாயின் தவம் இன்று வெற்றி பெற்றுள்ளது” என்றும், இதுவே “உண்மையான இந்தியாவின் கதை” என்றும் பாராட்டி வருகின்றனர். கௌரவ் சாவந்தின் இந்த வெற்றி, கடின உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது. தன் மகனின் வெற்றியைக் கண்டு அந்தத் தாய் சிந்திய ஆனந்தக் கண்ணீர், பலரது இதயங்களைத் தொட்டுள்ளதுடன், சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
