அதிமுக, பாஜக கூட்டணியில் 6 சீட்… ஐஜேகே கட்சியின் அதிரடி முடிவு…!!

By Soundarya on தை 20, 2026

Spread the love

அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 6 தொகுதிகளைக் கேட்டுப் பெற உள்ளதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தலுக்காகத் தங்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதிப்படுத்தியதோடு, கூட்டணியில் 6 தொகுதிகளை இலக்காகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், பிப்ரவரி 8-ஆம் தேதி கடலூரில் ஐஜேகே-வின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு அல்லது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தங்களுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்ப்பதாகக் கூறிய பாரிவேந்தர், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.