அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினரும், எழும்பூர் வடக்கு பகுதி செயலாளருமான சொ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுகவின் எழும்பூர் வடக்கு பகுதி துணைச் செயலாளர் ஒய்.டி. சசிக்குமார் தனது தாய் கட்சியிலிருந்து விலகி அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.
ஒய்.டி. சசிக்குமாருடன் இணைந்து அதிமுக மற்றும் பிற மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தனர். புதிய உறுப்பினர்களை அமைச்சர் சேகர்பாபு சால்வை அணிவித்து வரவேற்றார். எழும்பூர் பகுதியில் அதிமுகவிற்கு வலுவான பின்னடைவாகக் கருதப்படும் இந்த இணைப்பின் போது, திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
