கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே பொங்கலுக்கு முன்பு நடிகர் விஜயிடம் முதற்கட்ட சிபிஐ விசாரணை நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டமாக நடிகர் விஜய் இன்று சிபிஐ போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
அப்போது சிபிஐ கேள்விக்கு விஜய்க்குரியதாவது சூழல் மேலும் மோசமாகும் என காவல்துறை கூறியதால் கரூரில் இருந்து வெளியேறினேன் .காவல்துறை அமைத்துக் கொடுத்த பாதையில் தான் கரூரை விட்டு வெளியேறினேன். தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் ஜாக்கிரதையாக செயல்பட்டு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
