காலையிலேயே குட் நியூஸ்…. குடும்ப அட்டைகளுக்கு ரூ.3,000.. தமிழக அரசு அறிவிப்பு….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 90 சதவீத அட்டைதாரர்கள் இந்த பரிசினைப் பெற்றுள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை வாங்க முடியாதவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்ட பொங்கல் பரிசைப் பெறத் தவறியவர்கள், இன்று முதல் அந்தந்த நியாய விலை கடைகளுக்குச் சென்று தங்களது பொங்கல் பரிசை  பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகம் தொடரும் என்பதால், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.