இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இளம் வீரர் ஹர்ஷித் ராணா தனது பேட்டிங் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா துரத்தியபோது களமிறங்கிய ராணா, விராட் கோலியுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 43-வது ஓவரின் போது, விராட் கோலி இரட்டைச் சதம் அடிப்பதை விட, அணியின் வெற்றியே முக்கியம் என அதிரடியாக விளையாடிய ராணா, சிக்ஸர் அடித்து தனது முதல் ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
Harshit Rana first ODI hard hitting 52 under Pressure 👏👏#INDvsNZ #HarshitRana pic.twitter.com/xvc29MMrhX
— Virat Kohli 18 (@viratkohlifc518) January 18, 2026
Today’s Villan in the #INDvsNZ match , India was winning till he thought he was a Hero.
Did not listen to Gambhir’s instructions to take a single and give strike to Kohli after he hit 50. pic.twitter.com/cFGIVKU2rC
— Voice of Truth 🚨🚨🚨 (@VooiceOfTruth) January 18, 2026
இருப்பினும், போட்டியின் முக்கியமான கட்டத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழங்கிய ஆலோசனையை மீறி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிங்கிள்ஸ் எடுத்து நிதானமாக விளையாடுமாறு கம்பீர் அறிவுறுத்தியும், ராணா மீண்டும் ஒரு பெரிய ஷாட்டிற்கு முயன்று ஆட்டமிழந்தார். இதனால் அதிருப்தியடைந்த கம்பீர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ராணாவின் இந்த ஆட்டமிழப்பு, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை நழுவச் செய்ததுடன், டிரஸ்ஸிங் ரூமில் பரபரப்பை ஏற்படுத்தியது.
