“8 வயது மகளை கிணற்றில் வீசி தாய் செய்த விபரீதம்”…. செங்கல்பட்டில் உறைந்து போன கிராமம்… அதிரவைக்கும் காரணம்….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, கணவர் பிரிந்து சென்ற சோகத்தில் பெண் ஒருவர் தனது 8 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈச்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்த கீதா (37) என்பவருக்கும், அருண் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுபஸ்ரீ என்ற மகள் இருந்த நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீதா தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த கீதா, நேற்று இரவு குடும்பத்தினருடன் வழக்கம்போல பேசிவிட்டு உறங்கச் சென்றுள்ளார். நேற்று காலை வீட்டில் கீதாவையும் அவரது மகளையும் காணாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தேடியபோது, அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட விரக்தியே இந்த முடிவுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.