ஊரே வேடிக்கை பார்க்க அரங்கேறிய அநீதி… 1.5 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன்… உலுக்கும் பின்னணி….!

By Nanthini on தை 18, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 16 வயது சிறுவன் ஒருவனை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி, சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியைக் காதலித்த விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்தினர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி போலீசில் தஞ்சம் அடைந்த நிலையில், சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து அண்மையில் தான் விடுதலையாகியிருந்தான்.

மாற்றுத்திறனாளியான தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட உஜ்ஜைன் வந்த சிறுவனை, சிறுமியின் உறவினர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அவனது ஆடைகளைக் கிழித்து, கைகளைக் கயிற்றால் கட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாகத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாகும். மாறாக, பலர் இச்சம்பவத்தைத் தங்களது செல்போன்களில் வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர்.

   

இறுதியாகக் காவல் நிலையத்திற்கு அருகே வந்தபோது, போலீசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நான்கு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனித நேயமற்ற இந்தத் தாக்குதல் மற்றும் பொதுமக்களின் மௌனம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.