“இந்த நாளை குறிச்சு வச்சிக்கோங்க” தவெகவுடன் யார் யார் கூட்டணி..? செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு..!!

By Soundarya on தை 18, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தெந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன என்பது வரும் ஜனவரி 23-ம் தேதி தெரிந்துவிடும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். தவெக தலைவர் விஜய், “ஆட்சியில் பங்கு” என்ற அறிவிப்பின் மூலம் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இதுவரை எந்தவொரு பெரிய கட்சியும் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியுடன் கைகோர்க்க முன்வராத நிலையில், செங்கோட்டையனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதே சமயம், வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது முழு வடிவத்தைப் பெறவுள்ளது. இந்தச் சூழலில், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையப்போகும் கட்சிகள் மற்றும் தவெக-வின் நிலைப்பாடு குறித்து நிலவும் குழப்பங்களுக்கு அன்றைய தினம் விடை கிடைக்கும் என்ற நோக்கில் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தவெக-வின் முதல் தேர்தல் களம் என்பதால், அதன் கூட்டணி வியூகங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.