12-ஆம் வகுப்பிலேயே நின்றுபோன திவ்யாவின் திருமணம்… இந்த பிரபல இயக்குநரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Soundarya on தை 17, 2026

Spread the love

விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையான திவ்யா கணேஷ், தனது வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்த பின்னரே இன்றைய நிலையை எட்டியுள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்த அவர், மனம் தளராமல் மீண்டும் படித்து தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு, கர்ப்பமாக இருந்த தனது அக்காவிற்கு உதவி செய்வதற்காக ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு வந்தபோதுதான், அவருக்கு ‘விஸ்காம்’ படிப்பு குறித்து தெரியவந்தது. கடும் போராட்டத்திற்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்த அவருக்கு, குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்குள் நுழைந்தார்.

   
தனிப்பட்ட வாழ்க்கையில், 2017-ம் ஆண்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் உடன் திவ்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்த உறவினர்களாக இருந்தபோதிலும், சில காரணங்களால் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்படாததால் அந்தத் திருமணம் நின்று போனது. பின்னடைவுகளைக் கடந்து ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘மகாநதி’ போன்ற சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த திவ்யா, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்களின் பலத்த ஆதரவைப் பெற்றுள்ள அவர், இம்முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.