“பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வரலாம்”… அமித்ஷாவிற்கு ஆ.ராசா விடுத்த பகிரங்க சவால்… அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on தை 17, 2026

Spread the love

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, சனாதன தர்மம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். இந்து மதத்தின் அடிப்படை தர்மங்கள் மற்றும் கடமைகளை உள்ளடக்கியதாக சனாதனம் கருதப்பட்டாலும், அது மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில், டெல்லியில் ஒரு லட்சம் பேர் முன்னிலையில் சனாதனம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும், பாஜகவில் இதற்கு துணிச்சலுள்ள யாராவது உண்டா என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக சனாதனத்தை உயர்த்திப் பிடித்து அரசியல் செய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதன கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆ.ராசாவின் இந்த நேரடி சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வரலாம்’ என்று அவர் விடுத்துள்ள இந்த அழைப்பிற்கு, அக்கட்சியின் தரப்பில் இருந்து விரைவில் தகுந்த எதிர்வினை அல்லது பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.