விடுதி அறையில் தூக்கில் தொங்கிய 2 சிறுமிகள்… அதிகாலையில் கதவை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி….!

By Nanthini on தை 15, 2026

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (SAI) விடுதியில் தங்கியிருந்த இரண்டு இளம் வீராங்கனைகள் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு உடற்பயிற்சிக்காக மைதானத்திற்கு மற்ற மாணவிகள் சென்ற நிலையில், கோழிக்கோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் ஒரே அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ஏன் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இது தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அழுத்தம் அல்லது மர்மங்கள் உள்ளதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த துயர சம்பவம் கேரள விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.