புதுவையில் புதிதாக கட்சி தொடங்கிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் நேற்று NDA கூட்டணியில் இணைந்தார். இது NR ரங்கசாமியுடன் விஜய்யின் தவெக இணைய முட்டுக்கட்டையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் ஜோஸ் சார்லஸ் மார்டினின் மைத்துனரான ஆதவ் அர்ஜுனா தான். இந்நிலையில் இன்று, NDA கூட்டணியில் காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை LJK கட்சிக்கு ஒதுக்கவும் தாமரை சின்னத்தில் போட்டியிடவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.