குளிர்காலத்தில் கீசர்கள் மற்றும் ரூம் ஹீட்டர்களின் அதிகப்படியான பயன்பாட்டால் மின்சாரக் கட்டணம் எகிறி பட்ஜெட்டைப் பதம் பார்க்கிறது. இதைத் தவிர்க்க, 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்களை மாற்றுவதும், பழைய மின் கருவிகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும். குறிப்பாக, பகல் நேரங்களில் ஜன்னல் திரைகளை விலக்கி இயற்கை வெளிச்சத்தையும், வெப்பத்தையும் வீட்டிற்குள் அனுமதிப்பதன் மூலம் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
குளிப்பதற்குச் சுடுதண்ணீர் வந்தவுடன் கீசரை அணைத்துவிடுவதுடன், கம்பளிப் போர்வைகள் மற்றும் தடிமனான ஆடைகளை அணிவதன் மூலம் ஹீட்டர் போடும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். சாதாரண பல்புகளுக்குப் பதில் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதும், கதவு மற்றும் ஜன்னல்களைச் சரியாக மூடி அறையின் வெப்பத்தைப் பாதுகாப்பதும் மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க உதவும். சிறிய மாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் குளிர்காலத்திலும் உங்கள் பணத்தைச் சேமிக்க முடியும்.
