FLASH NEWS: திடீர் திருப்பம்… தவெகவுடன் கூட்டணி இல்லை… விஜய்க்கு ஷாக் கொடுத்த பிரபலம்…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நிலையில் திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இதனிடையே தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமையும் என தமிழக வெற்றி கழகம் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி நீலகிரி கூடலூரில் நடந்த பள்ளி விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவுடன் நெருக்கமாக சிரித்தபடி நீண்ட நேரம் பேசியது தமிழக வெற்றி கழகம் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் இந்த நடவடிக்கை விஜய் தரப்பின் கூட்டணி கனவுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.