தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ₹3000 ரொக்கத் தொகையைப் பெறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இந்த விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை ஜனவரி 14-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹3000 ரொக்கம் ஆகியவை வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்னும் பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள், இந்த கூடுதல் வாய்ப்பைப் பயன்படுத்தி நாளை தங்களின் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
