தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக, புவேர்ட்டோ லோபஸ் கடற்கரைப் பகுதியில் ஐந்து மனித தலைகள் கயிறுகளில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஈக்வடார் நாட்டு பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
