மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்குச் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, ஜனவரி 12, 2026 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தலவிருட்சம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல எச். ராஜா முயன்றார். அங்கு சமீபத்தில் தர்கா நிர்வாகத்தினர் கொடியேற்றியதாகக் கூறி எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த இடத்தைப் பார்வையிட அவர் சென்றபோது காவல்துறையினர் அவரைத் தடுத்தனர்.
தன்னைத் தடுத்த காவல்துறையினருடன் எச். ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “உங்கள் வண்டியில் நான் ஏன் ஏற வேண்டும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
