சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த வரலாற்று அரசியல் படத்தில், மலையாள நடிகர் பேசில் ஜோசப் ‘டோமன் சாக்கோ’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
அவர் திரையில் தோன்றும் சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளார். ஓடிடி தளங்கள் மூலம் ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான இவருக்கு, திரையரங்குகளில் விசில் பறக்கக் கைதட்டல்கள் கிடைப்பது கோலிவுட்டில் அவரது அதிரடி அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பேசில் ஜோசப் மட்டுமின்றி, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் கன்னட நடிகர் தனஞ்சயா ஆகியோரும் முக்கியமான கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.
குறுகிய நேரமே வந்தாலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகர்களின் பங்களிப்பு படத்திற்குப் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களால் ‘பராசக்தி’ ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தைத் தந்து வருகிறது.
