திடீர் திருப்பம்… திமுகவுடன் கூட்டணி?… சற்றுமுன் தைலாபுரத்தில் ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே ஆன பிளவு காரணமாக கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது. அன்புமணி தலைமையிலான பாமக அணி கடந்த ஜனவரி 7ஆம் தேதி அதிமுக உடனான கூட்டணியில் இணைந்தது. இது திமுகவுக்கு எதிரான பெரிய அணியாக உருவெடுத்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு தனியாக விடப்பட்ட நிலையில் அவர் திமுக பக்கம் திரும்புவதாக தகவல் வெளியானது. அதே சமயம் திமுக ஆட்சியை நன்றாகத்தான் இருக்கிறது என்று ராமதாஸ் பாராட்டி இருந்தார்.

இதனால் அவர் திமுக பக்கம் செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. கூட்டணி தொடர்பான அறிவிப்பையும் ராமதாஸ் இதுவரை அறிவிக்காத நிலையில் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணி குறித்து பேசி வருகிறோம், பாஜக தரப்பில் இதுவரை பேசவில்லை என்றார். தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைக்கு திமுக அழைத்ததா என்ற கேள்விக்கு, திமுகவும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.