தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லீமா ரோஸின் மகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முக்கியப் பொறுப்பில் உள்ளார். அதேபோல், லீமா ரோஸின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் எல்.ஜே.கே (LJK) கட்சியில் இருக்கும் நிலையில், தற்போது லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
