BREAKING: புயல் சின்னம்.. மீண்டும் கனமழை வெளுக்கும்… காலையிலேயே அலெர்ட்…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, இலங்கை கடலோரப் பகுதிகளைக் கடந்த நிலையில், தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

  இதன் தாக்கத்தால், இன்று தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 12 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.