BIG BREAKING: முதல் வேட்பாளராக அறிவிப்பு…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வர பாமகவில் அப்பா மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த அன்புமணி தரப்பு பாமக அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது.

இப்படியான நிலையில் ராமதாஸ் தரப்பில் பாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் 2026 தேர்தலில் பாமக செயல் தலைவர் காந்திமதி போட்டியிடுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என குறிப்பிடப்படவில்லை. அன்புமணி NDA கூட்டணியில் இணைந்த நிலையில் பாமக சார்பில் வேட்பாளர் என ராமதாஸ் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது