1 இல்ல 2 இல்ல 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்துக் கொண்டே இருக்கும் முதியவர்… முக்கூடலில் ருசிகரம்…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்ற 80 வயது முதியவர் ஆரம்பகாலங்களில் எலக்ட்ரீசியன் மற்றும் சைக்கிள் கடை என பல தொழில்கள் செய்து வந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டுக்கு தேவையான சிறு சிறு வேலைகளை செய்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் அவருடைய பள்ளி பருவத்தில் இருந்து சுமார் 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்துக்கொண்டே இருந்து வருகின்றார். இது பற்றி அவர் கூறுகையில், நான் 1956 ஆம் ஆண்டு முக்கூடல் அருகே உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பில் மாணவர் ஒருவர் சரியாக பேச முடியாமல் தவித்ததால் பள்ளி ஆசிரியர் அந்த மாணவன் வாயில் சிறிய கல்லை போட்டு பேசுமாறு தெரிவித்தார்.

அதேபோல் நாமும் செய்தால் என்ன என்று நினைத்து நான் முப்படை எனது நண்பர்கள் 10 பேர் வாயில் கல்லை போட்டு சுற்றி திரிந்தோம். அதில் ஒரு நண்பர் விளையாடும் போது பல் உடைந்து கல்லை வெளியேற்றி விட்டான். தொடர்ந்தே சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர். ஆனால் எனக்கு வெளியே எடுப்பதற்கு விருப்பமில்லை. சாப்பிடும் போதும், குளிக்கும்போதும், வேலை பார்க்கும் போது மற்றும் தூங்கும் போது என அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றி திரிந்தேன்.

   

இவ்வாறு சுமார் 69 ஆண்டுகளாக இதே போல் வாயில் கல்லை போட்டுள்ளேன். ஒருமுறை நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது வாயிலிருந்த கல்லை என்னுடைய மனைவி எடுத்து நெல் முட்டையில் போட்டுவிட்டார். அதனைத் தேடி எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டேன் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.