தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்… “ஒருவேளை அது நடந்துடுமோ” பயத்தில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்…!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய வாக்காளர் (D-Voter) என்ற அடிப்படையில் அவருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் மனமுடைந்த அவர், நேற்றுத் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸைப் பெற்றதிலிருந்து அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, சட்டவிரோதமாகக் குடியேறியவராக அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், உண்மையிலேயே தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தான் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.