பால் குடிக்கும்போது வந்த இருமல்… அடுத்த நொடி பிஞ்சுக் குழந்தையின் உயிர் போன சோகம்… கோவையில் அதிர்ச்சி..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளி வேல் என்பவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (23). இவர்களுக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த வரதலட்சுமிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 20-ஆம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் சில பாதிப்புகள் இருந்ததன் காரணமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் மேலதிக சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, வரதலட்சுமி தன் குழந்தைக்குப் பால் கொடுத்துள்ளார். அப்போது திடீரென்று குழந்தைக்கு இருமல் வந்து, எவ்வித உடல் அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள். பால் குடிக்கும்போது  புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.