தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியான நிலையில் நேற்று முன்தினம் பாமகவும் அந்த கூட்டணியில் இணைந்தது. இதில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று பழனிச்சாமி மற்றும் பாஜக கருதுகிறது. எனவே அதற்கு ஏற்ப கூட்டணியை பலப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் தேமுதிக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்ற அனைவரும் NDA கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அமித்ஷா நினைக்கிறாராம்.
டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருவதால் எடப்பாடிக்கு அதிக பிரச்சனை இல்லை. ஆனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ்ஐ அவர் ஏற்பாரா என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி சென்ற ஈ பி எஸ் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணிக்கு 50 சீட் கொடுக்க வேண்டும் என அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமிடம் கூறியுள்ளார். அந்த 50 சீட்டுகளில் பாஜக மூலமாக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது டிடிவி தினகரனுக்கு பாஜக தான் எவ்வளவு தொகுதி என பிரித்துக் கொடுக்கும் என தெரிகிறது. அதேசமயம் தேமுதிகவும் இந்த கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இந்த முறை கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் அமித்ஷா சொன்னதால் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளார் பழனிசாமி. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கூட்டணி ஆட்சி என்பது நடந்தது கிடையாது. ஆனால் அதிமுகவுக்கு தற்போது வேறு வழியில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.
