அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்…!! தமிழக அரசு தரும் ரூ.5000 ஊக்கத்தொகை…!! விண்ணப்பிப்பது எப்படி…?

By Devi Ramu on தை 9, 2026

Spread the love

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுகளின் இறுதிப் பகுதியான ஆளுமைத் தேர்வுக்குத் தகுதியான தமிழக மாணவர்களுக்கு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்கச் செல்லும் தேர்வர்களுக்குப் பயணச் செலவுக்காக 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பொருளாதார நெருக்கடியின்றித் தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் இந்த அதிரடி ஏற்பாட்டைச் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்கள், வரும் டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் அரசு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, டெல்லி பயணத்திற்கான ஊக்கத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.