அடம் பிடிக்கும் காங்கிரஸ்… சுக்குநூறாக உடையும் திமுக கூட்டணி… பரபரப்பை கிளப்பிவிட்ட முக்கிய அரசியல் புள்ளி…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழகத்தின் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதி மற்றும் ஆட்சியில் பங்கு என ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் திமுக கூட்டணி சிதறும் அபாயத்தில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருகின்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திமுக எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி தேமுதிக, அதிமுக கூட்டணியிலேயே இணையும். பிரேமலதா விஜயகாந்த் தனது கணவரின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட மாட்டார். அதிமுகவில் மக்கள் பணியாற்றும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.

   

ஆட்சியில் அதிகாரம் கேட்டு மாணிக்கம் தாகூர் எம்பி குரல் கொடுப்பது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் மோதலை வெளிக்காட்டுகிறது. இந்த கூட்டணி விரைவில் பிளவு பட வாய்ப்புள்ளது. தமிழக மக்கள் ஒரு கட்சியின் பெரும்பான்மை ஆட்சியை தான் விரும்புகிறார்கள். அதன்படி அதிமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை இபிஎஸ் மேற்கொள்வார். திமுக கூட்டணி நாளுக்கு நாள் பலமிழந்து வருவதாகவும் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.