அதிகாலையில் நடந்த கோர விபத்து… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… நொடி பொழுதில் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சோகம்…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சூரிய தேஜா, சுமித், ஸ்ரீ நிகில், ரோகித் மற்றும் மாணவி நட்சத்திர ஆகிய ஐந்து பேரும் நேற்று அதிகாலை ஹைதராபாத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாணவர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மாணவி நட்சத்திர மற்றும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நான்கு பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.