“எங்கள் கோவிலை இடித்துவிட்டீர்கள், குறைந்தபட்சம் எங்கள் முருகன் சிலையையாவது திருப்பித் தாருங்கள்” எனத் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது அங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“You demolished our temple… at least return our Murugan idol to us!”
A tearful plea from a young girl to Chief Minister Stalin after a temple was demolished in Eettiveerampalayam, Tiruppur district. A heartbreaking sight! 😢🙏 pic.twitter.com/HPeqqGYv9x
— Sk Palanikumar Yadav (@p_nikumar) January 8, 2026
தன் கண்முன்னே கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டு கலங்கிய அந்தச் சிறுமி, கண்ணீர் மல்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இடிக்கப்பட்ட கோவிலில் இருந்த முருகன் சிலையைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோள் காண்போர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படும்போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
