தமிழகத்தில் அதிர்ச்சி..! 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. நெல்லையில் பயங்கரம்…!!

By Soundarya on தை 9, 2026

Spread the love
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன் லெட்சுமணன், தனது எதிர் வீட்டில் வசிக்கும் சபரிராஜன் என்பவரது வீட்டிற்கு தொலைக்காட்சி பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சபரிராஜனுக்கும் மாணவன் லெட்சுமணனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணகுடி காவல்துறையினர், லெட்சுமணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான சபரிராஜனைத் தேடி வருவதுடன் கொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.