துபாயில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் (Parking), விலையுயர்ந்த லம்போர்கினி (Lamborghini) கார் TVK கொடி போல பெயிண்ட் செய்யபட்டுள்ளது. இதை பெண் ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் மற்றும் டிவிபி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். “கடல் கடந்தும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறக்கிறது” என்ற வாசகங்களுடன் இக்காணொளி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கிய பிறகு, தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு விதங்களில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Tvk flag Lamborghini Car spotted in Dubai Parking🔥🔥🔥 pic.twitter.com/gJ63KaVe0p
— Vijayaragavan (@vijaytalks9164) January 8, 2026
அதன் ஒரு பகுதியாகவே துபாயில் இந்த லம்போர்கினி கார் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வீடியோ துபாய் போன்ற உலகளாவிய நகரங்களில் விஜய்யின் அரசியல் வருகைக்கான வரவேற்பை வெளிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
