முதலமைச்சரின் கார் டயர் வெடித்ததற்கு காரணம் யார் தெரியுமா..? இது முருகன் கொடுத்த எச்சரிக்கை…. பகீர் கிளப்பிய செல்லூர் ராஜு…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

ஜனவரி 7, 2026 அன்று திண்டுக்கல்லில் அரசு விழாவை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் திரும்பிக் கொண்டிருந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த காரின் டயர் திருமங்கலம் அருகே திடீரென வெடித்தது. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த செல்லூர் ராஜூ, “முதலமைச்சரின் கார் டயர் பஞ்சர் ஆனதற்கு முருகனின் சக்தியே காரணம்” என்று கூறியுள்ளார்.

மேலும், இது திருப்பரங்குன்றம் முருகன் கொடுத்த ஒரு எச்சரிக்கை என்றும், இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான அறிகுறி என்றும் அவர் விமர்சித்துள்ளார். சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் விவாதங்களின் பின்னணியில் செல்லூர் ராஜூ இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் முதலமைச்சருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் உடனடியாக வேறொரு காரில் மாற்றப்பட்டுப் பாதுகாப்பாக மதுரை விமான நிலையம் சென்றடைந்தார்.