திடீர் திருப்பம்… தவெகவுடன் கூட்டணி அமைக்கும் பிரபல கட்சி?… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால் பல கட்சிகளும் இந்த கட்சிகளுடன் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இதனிடையே புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சமீபத்தில் நடந்த கட்சி மாநாட்டில் பேசிய போது, திமுக ஆட்சி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி இருக்கும் வரை எந்த திட்டங்களும் மக்களை சென்று சேராது.

திமுக ஆட்சிக்கும் விடை கொடுப்பது தான் ஒரே வழி. வெனிசுலா அதிபர் செய்த குற்றச்சாட்டை விட மிகப்பெரிய தவறுகளை ஸ்டாலின் செய்து உள்ளார். தமிழகத்தில் மது கடைகளை திறந்து வைத்துள்ள முதலமைச்சருக்கு என்ன தண்டனை கொடுப்பது. ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்கும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

   

தமிழக வெற்றி கழகம் கட்சி மட்டுமே ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை முன் வைத்துள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டு வருவதால் திமுக மற்றும் அதிமுக இதற்கு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. புதிய தமிழகம் கட்சியும் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.