சமீபகாலமாகவே திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவரும் சிலரின் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்திலும் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் ஆன கூட்டணி தொடரும் என காங்கிரஸிலிருந்து ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருவதும் மற்றொரு தரப்பினர் கருத்துக்கள் திமுகவை சீண்டி பார்க்கும் விதமாகவே அமைவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றன. காங்கிரஸின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில் தமிழக அரசியலில் அது விவாத பொருளானது.
விஜயுடன் சந்திப்பை நேற்று அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இப்படியான நிலையில் INDIA கூட்டணியில் காங்கிரஸ் ஒரு பகுதி, திமுக பங்காளி என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அத்துடன் கூட்டணி கட்சிகள் மாற்றம் குறித்த விவாதம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்து திமுக உடனே கூட்டணி என்ற நிலையை காங்கிரஸ் உறுதிப்படுத்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
