தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
அதன்படி இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கண்பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை இல்லாததால் மாதவிடாய் காலங்களில் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சிரமமாக இருக்கும் என்று சிறுவயதிலேயே கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்களாம். இது தெரிந்து ஒரு பார்வையற்ற நபர் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தமிழா தமிழா அரங்கில் அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
