ஈவு இரக்கமே இல்லையா..? ஓடும் காரின் பின்னே நாய்களைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்… வைரல் வீடியோவால் சிக்கிய 68 வயது முதியவர்…!!

By Soundarya on தை 7, 2026

Spread the love

அமெரிக்காவின் லாங் ஐலேண்ட் நகரத்தில், ஓடும் காரின் பின்புறத்தில் இரண்டு நாய்களைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் பிட் புல் ரக நாய்கள் அதிவேகமாகச் செல்லும் காரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதைக் கண்டு பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த குயின்ஸ் மாவட்ட வழக்கறிஞர் மெலிண்டா காட்ஸ், இந்தச் செயலில் ஈடுபட்ட லாங் ஐலேண்ட் நகரத்தைச் சேர்ந்த 68 வயதான டான் புஜோர் என்பவரை விலங்கு வதை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார். மீட்கப்பட்ட அந்த இரண்டு நாய்களுக்கும் தற்போது உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.