“சின்னதா பறந்து வந்த தூசி”… குற்றாலம் லாட்ஜில் வைத்து மாவு மில் ஓனரை போட்டு தள்ளிய இளைஞர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மேல புதுக்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காணவில்லை என்று அவருடைய மனைவி நேற்று இரவு போலீஸ் இரு புகார் அளித்தார். இதை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தபோது கடைசியாக ராம்குமாரை கௌதம் என்ற நபர் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாக அவருடைய மனைவி தெரிவித்தார். இந்நிலையில் கௌதமின் செல்போன் என்னை கண்டறிந்த போலீசார் அதை வைத்து விசாரணை நடத்திய போது அந்த செல்போன் எண் குற்றாலம் பகுதியில் இருப்பது தெரிய வந்ததால் குற்றாலத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்போன் சிக்னல் காண்பித்த இடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சோதனை நடத்தினர்.

அங்கு லாட்ஜில் உள்ள ஒரு அறையில் ராம்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். மேலும் அருகில் இருந்த மற்றொரு அறையில் மூன்று நபர்கள் போதையில் இருந்தது தெரிய வந்ததால் அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அதில் ஒருவர் ராம்குமாரை வீட்டில் இருந்து அழைத்து வந்த வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பதும் அவருடன் இருந்த நபர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் முகமது ஆசிக் என்பதும் தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் விசாரித்த போது ராம்குமாரை தாங்கள் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

   

உயிரிழந்த ராம்குமார் மாவு மில் ஒன்றை நடத்தி வந்த நிலையில் அந்த மில்லுக்கு எதிரே கௌதம் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். அந்த மில்லில் இருந்து வரும் தூசி டைலர் கடையில் இருந்த துணிகள் மீது படர்வது வழக்கமாக இருந்தது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த கௌதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராம்குமாரை குற்றாலத்திற்கு சுற்றுலா செல்வோம் என்று அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. தற்போது அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.