BREAKING: பொங்கல் பரிசு ரூ.3000…. CM ஸ்டாலின் அடுத்த அறிவிப்பு..!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஜனவரி 8 நாளை முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட 3000 ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணிகள் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 13 வரை பொங்கல் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.