பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது இந்த சந்திப்புக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாமகவும் இணைந்துள்ளது. இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்துள்ளோம். இது ஒரு வலுவான கூட்டணி. எங்களின் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதுதான்.
ஊழல் நிறைந்த திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, அனைத்து தரப்பினருக்கும் எதிரான ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெறப்போகிறது. நடைப்பயணத்தின் போது மக்கள் மிகவும் ஆதரவாக உள்ளனர். தேர்தல் எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அதேசமயம் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து பாமக தொண்டர்களின் கருத்து கேட்ட இந்த கூட்டணி முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
